கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு..? சற்று நிம்மதியில் உலக மக்கள்..! தீயாய் பரவும் தகவல்..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. பாம்பு சூப்பில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 300 கும் மேலான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.
இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தாய்லாந்து நாட்டில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 71 வயது பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் காய்ச்சலுக்கான எதிர்ப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு அந்த பெண்ணின் இரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த மருந்து வேலை செய்திருப்பதாகவும், இதன் அடுத்தகட்ட முயற்சியில் இந்த மருந்தை முழுவதும் வேலை செய்ய வைக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு தாய்லாந்து மருத்துவர்களின் இந்த முயற்சி சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.