உலகம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்! 14 பேர் பரிதாப பலி!

Summary:

terrorist attack in church

ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் பர்கினோ பாசோ நாட்டில் உள்ள ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அந்த நாட்டு ராணுவத்தினர் அந்தப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 


Advertisement