பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு.. பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு..!

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு.. பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு..!


Terrible blast in Pakistan.. Death toll rises to 61..!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு தொழுகை கூடத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் உயிர்பலி எண்ணிக்கை 61 அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் நிகழ்ந்த இந்த தற்கொலை படை தாக்குதலில் 61 பேர் உயிரிழந்ததாகவும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு மசூதியில் மதிய தொழுகையின் போது தீவிரவாதி தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இதனால் மசூதியின் 2 மாடிகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் இந்த இடிபாடுகளில் பலரின் உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுனையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.