இலங்கையில் பல மாதங்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைவு; மக்கள் லேசான நிம்மதி.!

இலங்கையில் பல மாதங்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைவு; மக்கள் லேசான நிம்மதி.!


SriLanka Petrol Diesel Price Down

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உயர்த்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது

இலங்கையில் நிலவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக, அந்நாட்டின் அரச பொறுப்பில் இருந்த இராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். 

உலகளாவிய அழுத்தம் மற்றும் உள்நாட்டில் விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பணியாற்றி வருகிறார். பிரதமராக தினேஷ் குணவர்டே பணியாற்றி வருகிறார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பல்வேறு நாடுகளின் உதவியுடன் தனது நாட்டு நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிடம் கடனும் வாங்கி இருக்கிறது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உயர்த்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, டீசல் விலை அந்நாட்டு பணத்தில் ரூ.7 குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.330 எனவும், ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 குறைக்கப்பட்டு ரூ.330 எனவும், 95 ஆகிட்டேன் பெட்ரோல் விலை ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.365 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.