11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த துறவி.. தாய் செய்த துரோகம்.. அதிர்ச்சிதரும் கொடூரம்.!



Sri Lanka Shock: Buddhist Monk Arrested for Alleged Abuse of 11-Year-Old Girl, Mother Also Held

தாயின் உதவியுடன் 11 வயது சிறுமியை புத்த துறவி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. 

புத்த துறவி கைது:

இலங்கையில் உள்ள கொழும்புவில், 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மூத்த புத்த துறவியை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். 71 வயதாகும் பல்லேகம ஹேமரத்ன என்ற நபர், கொழும்புவில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

World news

2022ம் ஆண்டு நடந்த கொடுமை: 

கடந்த 2022ம் ஆண்டு 11 வயது சிறுமியிடம் பல்லேகம சிறுமியிடம் அத்துமீறிய நிலையில், இதுதொடர்பான விசாரணைக்குப்பின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற புத்த கோயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கோயிலின் தலைமை சமயகுருவாக பல்லேகம இருக்கிறார். 

தாயும் கைது:

மேலும், சிறுமியை வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த புகாரில், சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
 

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!