பணத்துக்காக 60 வயது பெண்ணை மணந்த இலங்கை இளைஞர்- கடைசியில் நிகழ்ந்த சோகம்!

பணத்துக்காக 60 வயது பெண்ணை மணந்த இலங்கை இளைஞர்- கடைசியில் நிகழ்ந்த சோகம்!


sri lanka- 60 years old dayan married for 26 young boy

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்  டயன் டீ. 60 வயதான இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு  சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அச்சமயத்தில் பிரியஞ்சனா டீ ஜோய்சா என்ற 26  வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் வயது வித்தியாசத்தை மீறி இருவரும் அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகுதான்  டயனுக்கு, பிரியஞ்சனா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது.

Brithaniya

கடந்த 2017-ல் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்ற டயன் கொழும்பில் ஒரு வீட்டை பிரியஞ்சனாவுக்காக வாங்கியுள்ளார்.இதோடு £31,000 மதிப்புள்ள மினி பேருந்தையும் பிரியஞ்சனுக்காக வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக £90,000 வரை கணவருக்கு டயன் செலவு செய்தார்.

ஆனால் அதற்கு பிறகுதான் தெரிந்தது அவர் என்னை விரும்பி திருமணம் செய்து கொள்ளவில்லை. பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்தது எனக்கு தெரியவந்தது. அதனையடுத்து தனது சொந்த நாட்டுக்கு திரும்ப கூட என்னிடம் பணம் இல்லாமல் இருந்தது என டயன் கூறியுள்ளார்.  பின்னர் எப்படியோ பணத்தை சேர்த்து கொண்டு கடந்தாண்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.