கைப்பிடி இல்லாத குறுகிய சுவர்..! ஆபத்தை உணராமல் ஜன்னலில் இருந்து பால்கனிக்கு ஓடிய 3 வயது சிறுமி! இறுதியில் நடந்தது..? திக் திக் வீடியோ உள்ளே!

கைப்பிடி இல்லாத குறுகிய சுவர்..! ஆபத்தை உணராமல் ஜன்னலில் இருந்து பால்கனிக்கு ஓடிய 3 வயது சிறுமி! இறுதியில் நடந்தது..? திக் திக் வீடியோ உள்ளே!


Spain 3 years baby walks on window wall video

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். அதற்கு உதாரணமாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கைப்பிடி இல்லாத குறுகிய சுவர் ஒன்றில் குழந்தை ஓன்று அங்கும் இங்கும் ஓடி விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஸ்பெயினின் நாட்டில் உள்ள பாரடைஸ் பீச் என்ற பகுதியில் இருக்கும் அப்பார்ட்மென்டில் ஒன்றில்தான் இந்த பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் இருக்கும் சிறுமி ஒருவர் 3வது மாடியியல் ஜன்னல் வழியாக வெளியே வருகிறார்.

குறுகிய சுவரில் வந்து இறங்கிய அந்த சிறுமி ஜன்னலுக்கும் பால்கனிக்கும் இடையே அந்த சுவரில் அங்கும் இங்குமாக போய்வருகிறார். நல்லவேளையாக எந்த பாதிப்பும் இன்றி அந்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளது.

ஒருவேளை கால் தவறி கீழே விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் தப்பியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.