உலகின் மிக கொடிய பாம்புகள் பற்றி தெரியுமா? மற்ற பாம்புகளை உணவாக உண்ணும் பாம்பு இனங்கள்!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர். மேலும், பல லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட, இவர்களில் 55,000 பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
மழைக்காலங்களில் பாம்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. பாதுகாப்பான இடங்களை தேடி வீடுகளுக்குள் நுழையும் இந்த பாம்புகள், சில சமயங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மனிதர்களை கடிக்கின்றன. மேலும், வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு வீடுகளில் ஊடுருவும் வாய்ப்பும் உள்ளது.
இந்தியாவில் காணப்படும் பாம்பு இனங்கள்
ஒரு வனவிலங்கு நிபுணர் கூறுகையில், இந்தியாவில் 364 வகையான பாம்புகள் வாழ்கின்றன என்று குறிப்பிடப்படுகின்றது. பாம்புகள் பெரும்பாலும் பூச்சிகள், தவளை மற்றும் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. ஆனால், சில பாம்புகள் மற்ற பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டவை.
இதையும் படிங்க: உடலுறவு இல்ல, IVF சிகிச்சை இல்ல! தானாகவே கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்த பெண்! அது எப்படி தெரியுமா? வினோத சம்பவம்..
மற்ற பாம்புகளை உணவாக உண்ணும் பாம்பு இனங்கள்
ஆப்பிரிக்க ராக் பைதான்
மலைப்பாம்பு என்று அழைக்கப்படும் இந்த ஆப்பிரிக்க ராக் பைதான், உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும். இது மற்ற பாம்புகளை வேட்டையாடி உணவாக உண்ணும் தன்மை கொண்டது.
ஈஸ்டர்ன் இண்டிகோ பாம்பு
வட அமெரிக்காவில் வாழும் இவை பெரிதாக விஷம் இல்லாத பாம்புகள். ஆனால், ராட்டில்ஸ்நேக் மற்றும் செம்புத் தலை போன்ற விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடி உண்ணும்.
நீல மலாயன் பவளப்பாம்பு
இவை சிறிய வகையான பாம்புகளை தேர்ந்து எடுத்து வேட்டையாடி சாப்பிடும் தன்மை உடையவை.
ராஜ நாகம்
ராஜ நாகம் என்பது மிகவும் பிரபலமான ஒரு பாம்பு இனம். இது தன் இனத்தையும், சாரை, விரியன், நீர்க்கோலி போன்ற பல்வேறு பாம்புகளை வேட்டையாடி உணவாக்குகிறது.
மஞ்சள் எலிப் பாம்பு
தென்கிழக்கு அமெரிக்காவில் காணப்படும் இந்த பாம்பு, விஷமுள்ள பாம்புகளை உணவாக மாற்றும் தன்மை கொண்டது.
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் சாப்பிட்டா இலவசம்! அங்க தான் டுவிஸ்ட்டே இருக்கு! ஒரு வாய் சாப்பிட்ட நபரின் பரிதாப நிலையை பாருங்க! வைரலாகும் வீடியோ..