அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஷாக்.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவை விட்டு பிரிந்தது.. லண்டனை விட இரு மடங்கு பெரிதானது என்று கூறும் விஞ்ஞானிகள்.!
உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை என்று அழைக்கப்படும் A23a பனிப்பாறையானது அண்டார்டிகாவை விட்டு பிரிந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பனிப்பாறையானது சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பனிப்பாறையானது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவிலிருந்து பிரிந்த இந்த A23a பனிப்பாறையானது வெடல் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் இந்தப் பனிப்பாறையானது காற்று மற்றும் கடல் நீரோட்டம் இவைகளின் காரணமாக மீண்டும் பிரிந்து அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு பகுதியை நோக்கி நகர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பனிப்பாறையானது தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்தால் அங்கு வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த பணிப்பாறையானது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.