பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி.. மோசமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிசிஎம் 137 மாயம்.. அச்சத்தில் அதிகாரிகள்..!
ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி.. மோசமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிசிஎம் 137 மாயம்.. அச்சத்தில் அதிகாரிகள்..!

ஆஸ்திரேலியாவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சிசிஎம் 137 மாயமானதாகவும் மேலும் இது மிக மோசமான முறையில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கதிரியக்க பொருள் என்பதாலும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சிசிஎம் 137 என்ற கதிரிக்கு பொருள் நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனது. இந்த கதிரியக்க பொருளானது சுரங்கத்திலிருந்து லாரியில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டபோது மாயமானதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகாரிகள் கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சீசியத்தை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும் கதிர் இயக்கம் வெளியானால் தீக்காயம் போன்ற கொடூரமான காயங்கள் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் ஆஸ்திரேலியா அதிகாரிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.