தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின் டேக்சி ஓட்டுநராக பணியாற்றிய ரஷிய அதிபர் - நினைவுகளை பகிர்ந்த அதிபர்.!
கடந்த 30 வருடத்திற்கு முன்னர் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த நேரத்தில் தான் டேக்சி ஓட்டுநராக பணியாற்றியதாக ரஷிய அதிபர் தெரிவித்தார்.
சோவியத் ஒன்றியம் சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்த நிலையில், கடந்த 1991 ஆம் வருடம் வீழ்ச்சியடைந்தது. இதன்பின்னரே, ரஷியா உட்பட பல்வேறு குடியரசுகள் உருவாகியது. சோவியத்தின் உளவுப்படையில் அன்று பணியாற்றி வந்த இன்றைய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இன்றளவும் சோவியத் ஒன்றியத்தின் கோட்பாடுகளை முழுமையாக நம்பி வருகிறார். மேலும், அவர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை மிகப்பெரிய அரசியல் பேரழிவாகவும் கருதுகிறார்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி போது, பொருளாதார நெருக்கடியில் அந்நாட்டு மக்கள் சிக்கிய நிலையில், அன்றைய நாளில் தான் கார் ஓட்டுநராக பணியாற்றியதாக புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆவணப்படம் ஒன்றில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்த ஆவணப்படத்தில் அவர் பேசியதாவது,
"எனக்கு சோவியத்தின் வீழ்ச்சி குறித்து பேச விருப்பமில்லை என்றாலும், அது துரதிஷ்டவசமாக நடைபெற்றது. அதுவே உண்மை. சோவியத் யூனியனின் சரிவு வரலாற்று ரஷியாவின் முடிவு ஆகும். கடந்த 30 வருடத்திற்கு முன்னர் சோவியத் யூனியன் வீழ்ச்சி பொதுமக்களுக்கு பெரிய சோகமாக அமைந்தது. கூடுதல் பணம் சம்பாதிக்கும் கட்டாயமும் ஏற்பட்டது. இதனால் நான் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றினேன்" என்று தெரிவித்தார்.