ரஷிய அதிபரை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.. கைதாணை பிறப்பித்து அதிரடி.!Russian President Vladimir Putin against Arrest Order by International Court

 

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதிகள், ரஷிய அதிபரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர்தொடுத்து சென்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ரஷியாவிடம் உக்ரைன் சரணடையாதவரை போர் நிறுத்தப்படமாட்டாது என ரஷியா திட்டவட்டத்துடன் கூறிவிட்டது. 

இதனால் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இராணுவ மற்றும் பொருளுதவி செய்து வருகின்றன. ரஷிய அதிபருக்கு எதிராக உக்ரைன் பல குற்றசாட்டுகளை உலக அரங்கில் முன்வைத்து வருகிறது. 

russia

இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹாக்கி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டன. உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டன.  

இதுகுறித்து விசாரணை நடத்திய சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், போர்க்குற்றம் புரிந்தமைக்காக ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த கைது ஆணை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதுவே ஆரம்பம் என தெரிவித்தார்.