ரஷ்யாவின் குலைநடுங்க வைக்கும் திட்டம்.! மக்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை.! வெளியான பகீர் தகவல்.!Russia new plan

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.  

உக்ரைன் மீது ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன. ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க ரஷ்யா அதிர்ச்சி திட்டமொன்றை இனிவரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷிய உளவு அமைப்பின் ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், உக்ரைனில் போராட்டம் நடத்துபவர்களை, தலைமை தாங்குபவர்களை கடுமையான சிறை தண்டனை விதித்த உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.