#BigNews: உக்ரைன் இராணுவ முகாமில் ஏவுகணை தாக்குதல்.. 35 பேர் பலி., 134 பேர் படுகாயம்.. பதற்றத்தில் நேட்டோ நாடுகள்.!

#BigNews: உக்ரைன் இராணுவ முகாமில் ஏவுகணை தாக்குதல்.. 35 பேர் பலி., 134 பேர் படுகாயம்.. பதற்றத்தில் நேட்டோ நாடுகள்.!


Russia Missile Attacks Ukraine Poland Border Ukraine Army Base 34 Died 134 Injured

போலந்து - உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைன் இராணுவ முகாம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர். 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 14-வது நாளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, அதன் கூட்டணி நாடுகள் பொருளாதாரம், இராணுவ தளவாடங்கள் வழங்குவது ரீதியாகவும் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. 

மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று ரஷிய துணை அதிபர் உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்கள் கொண்டு வரும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். 

russia

போரின் தொடக்கத்தின் போதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைனுக்கு ஆதரவாக மற்றொரு நாடு நேரடியாக போர்க்களத்திற்கு வந்தால் வரலாறில் இல்லாத அழிவை அந்நாடு சந்திக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். உக்ரைன் அதிபர் நேட்டோவுடன் உக்ரைனை இணைக்கும் முயற்சியையும் கைவிட்டுள்ளார்.

இந்தநிலையில், போலந்து - உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைன் இராணுவ முகாம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைன் இராணுவ முகாமை தாக்கியதில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும், 134-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தற்போது தாக்குதலுக்கு உள்ளான முகாமில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஐரோப்பிய யூனியனில் ஒன்றாக இருக்கும் போலந்து நாட்டின் எல்லை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.