அதிரடி காட்டிய ரஷியா.. எரிவாயு விநியோகத்தை துண்டித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆப்பு.!

அதிரடி காட்டிய ரஷியா.. எரிவாயு விநியோகத்தை துண்டித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆப்பு.!



Russia banned Poland Gas Supply

உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்து சென்றுள்ளதால், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் பலவும் ரஷியாவின் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது. மேலும், எரிவாயு பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியே ரஷியாவில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேவையை பெற்று வருகிறது. 

மேற்கு நாடுகளின் பொருளாதார தடை காரணமாக அதிபதியான ரஷியா, இனி தன்னுடன் வணிகம் செய்ய தனது நாட்டு பணமான ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்க, ரூபிள் இல்லாம வணிகம் செய்தால் அந்த நாடுகளுக்கு வழங்கப்படும் சேவை இரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ரூபிள் பணத்தில் வணிகம் செய்யாத நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் ரஷியாவால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போலந்து மற்றும் பல்கேரியா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் வரும் மேற்கு நாடுகள் ஆகும்.