கட்டுப்பாட்டை இழந்த டிரக்கால் நிகழ்ந்த கோர விபத்து... 52 பேர் பலி, 32 பேர் படுகாயம்....road-accident-in-western-kenya-52-members-died-32-membe

கென்யாவின் மேற்கு பகுதியில் கட்டுபாட்டை இழந்த டிரக் ஒன்று விபத்துள்ளானதில் 52 பேர் பலியாகியுள்ளனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிரக் ஒன்றானது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதில் டிரக் பக்கத்தில் வந்த அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மொத்தம் 52 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விபத்து நடந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் ஒன்றாகும். இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.