போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான செலவுகளை குறையுங்கள்.. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்..!

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான செலவுகளை குறையுங்கள்.. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்..!


reduce-christmas-expenses-to-help-war-affected-people-p

வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான  செலவுகளை குறைத்து உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் போரை விரைவில் ரஷ்யா கைவிட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

மேலும் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருகின்றனர் என்றும் அவர்களது இதயங்களில் அமைதியும்,  மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.