குழந்தையை பெற்றுவிட்டு உயிரை விட்ட செவிலி தாய்.! கொரோனா வார்டில் சேவை செய்ததால் ஏற்பட்ட சோகம்.!
குழந்தையை பெற்றுவிட்டு உயிரை விட்ட செவிலி தாய்.! கொரோனா வார்டில் சேவை செய்ததால் ஏற்பட்ட சோகம்.!

இங்கிலாந்தில் கொரோனா வார்டில் பணியாற்றி கொரோனோவால் உயிர் இழந்த செவிலியருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மேரி அகியேவா அகியாபோங் என்ற பெண் செவிலியர் இங்கிலாந்தில் உள்ள லூட்டன் & டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா பிரிவில் செவிலியராக பணிபுரிந்துவந்துள்ளார். நிறைமாத கரிப்பினியான மேரி அகியேவா தான் கர்ப்பமாக இருப்பதை கண்டுகொள்ளாமல் சேவை செய்வதில்லையே ஆவலாக இருந்துள்ளார்.
இதன் விளைவாக அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேரி அகியேவாவின் உடல்நிலை நாட்கள் செல்ல செல்ல மிக மோசமடைந்துள்ளது. மேரி அகியேவா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
இதனை அடுத்து மேரிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. அதேநேரம் மேரியும் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை அவரது தாய் பார்த்தாரா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை.
மேலும் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய கர்ப்பிணி செவிலியர் உயிர் இழந்த சம்பவம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.