அதிர்ச்சி! திமிங்கிலத்தின் வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Plastic waste in thimingalam stomach


Plastic waste in thimingalam stomach

பிளாஸ்டிக் கழிவுகள், பிலிப்பைன்ஸ் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பொருட்களை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர் ஆராச்சியாளர்கள்.

சில நாட்களுக்கு முன்னர் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத்து மூக்கி திமிலங்கலம் ஒன்றை டி போன் கலெக்டர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் மீட்டுள்ளனர். அப்போது அந்த திமிங்கிலத்தின் வயிற்றில் சுமார்  40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலத்தின் வயிற்றில் சுமார் 16 அரிசி பைகளும், பல ஷாப்பிங் பைகளும் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "திமிலங்கத்தின் உடலில் இருந்த பிளாஸ்டிக் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது." என அந்த அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டேரெல் ப்ளாட்ச்லெ சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை ஒரு திமிங்கலத்தின் உடலில் இத்தனை பிளாஸ்டிக்கை கண்டதில்லை" என்று அந்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.