உலகம் லைப் ஸ்டைல்

கல்லூரி வளாகத்திலையே கட்டிப்பிடித்து காதல் புரோபோஸ்.. வைரலான வீடியோ.. ஷாக் கொடுத்த கல்லூரி நிர்வாகம்..

Summary:

இளம் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்தில் இளைஞரிடம் காதலை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறத

இளம் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்தில் இளைஞரிடம் காதலை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான லாகூர் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவி ஒருவர், பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் தனது காதலரிடம் தனது காதலை வெளியிப்படுத்தியுள்ளார்.

அதுவும் திரைப்படங்களில் வருவதுபோன்று, கையில் ரோஜா பூக்களுடன், தரையில் மண்டியிட்டு அந்த பெண் அந்த இளைஞரிடம் தனது காதலை கூற, அந்த இளைஞரும் அந்த பெண்ணை கட்டிபிடித்தபடி தனது காதலை ஏற்றுக்கொள்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அந்த காட்சி இணையத்தில் வைரலானது.

இந்த தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவர, அவர்கள் இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் தரும்படி அந்த மாணவிக்கும், மாணவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கையில் அடிப்படையில் அந்த இரண்டு மாணவர்களையும் கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளதாக லாகூர் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் நுழையவும் கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோ-ஷர்தாரி உட்பட பலரும் அந்த மாணவர்களுக்கு ஆதரவாகவும், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்தும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

 


Advertisement