இதற்கெல்லாம் கின்னஸ் சாதனையா!! 5 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி.. வைரல் வீடியோ.!

இதற்கெல்லாம் கின்னஸ் சாதனையா!! 5 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி.. வைரல் வீடியோ.!


oudest-burp-and-breaking-guinness-world-record

உலகில் பல விதமான வினோத சாதனைகளை பார்த்திருப்போம். இங்கு ஒரு நபர் இயற்கையாக மனிதனுக்கு வரக்கூடிய ஏப்பத்திற்கு கின்னஸ் சாதனை படைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் நெவில்.இவர் கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நெவில் 112.4 டெசிபெள் அளவிற்கு சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைக்கும் இந்த நபரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து நெவில் கூறுகையில், நான் எப்படியாவது சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஏப்பத்தை தேர்வு செய்தேன். என்னுடைய சிறுவயது முதல் சத்தமாக ஏப்பம் விடுவேன். இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.

இதனால் தற்போது கின்னஸ் சாதனை படைத்துவிட்டேன்” என தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்துபோய் இப்படி ஒரு சாதனையா? என தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.