கனவில் தேங்காய் உரிப்பதாக நினைத்த நபர்,கடைசியில் நண்பனுக்கு நிகழ்ந்த சோகம் - அதிர்ச்சி தகவல்!

கனவில் தேங்காய் உரிப்பதாக நினைத்த நபர்,கடைசியில் நண்பனுக்கு நிகழ்ந்த சோகம் - அதிர்ச்சி தகவல்!


one person murder his friend in unconseases

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பொப்லாசியனைச் சேர்ந்தவர்கள் ரோஜர் பஜே,எட்வர்டோ ரோஸ்கிடோஸ்,எட்கார்டோ கேனெட் என்னும் நண்பர்கள்.இவர்கள் மூவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கட்டுமான தொழிலாளி செய்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் காலை 8 மணிக்கு மூன்று பேரும் சேர்ந்து  மது குடித்து விட்டு  நன்கு தூங்கியுள்ளனர். திடீரென மதியம் ஒரு மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

உடனே கண்விழித்து பார்த்தபோது மூவரில் ஒருவரான எட்கார்டோ கேனெட் என்பவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.காரணம் ரோஜர்,எட்வர்டோ ரோஸ்கிடோஸ் என்பவரை  கண்ணை மூடியபடியே கையில் மரம் அறுக்கும்  இயந்திரத்தைக் கொண்டு அவர் தலையை அறுத்துள்ளார்.இதனைப் பார்த்த அந்த மூன்றாவது நண்பர் அருகில் உள்ள ஜன்னல் வழியாக எகிறி குதித்து ஓடி சென்று  போலீசில் புகார் அளித்துள்ளார்.

pilipainas

உடனே விரைந்து வந்த போலீசார் ரோஜர் என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கூறிய பதிலை கண்டு போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரோஜருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், சம்பவம் நடைபெற்ற அன்று கூட தேங்காய் உரிப்பதாக நினைத்து தான் கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.