உலகம் லைப் ஸ்டைல் Covid-19

தனக்கு கொடுக்கப்பட்ட கருவியை இளம் நோயாளி யாருக்காவது கொடுங்கள் என கூறி உயிரை விட்ட மூதாட்டி.! கண்கலங்க வைத்த சம்பவம்..!

Summary:

Old women donated ventilator to save young one and died

கொரோனோவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தனக்கு வழங்கப்பட செயற்கை சுவாச கருவியை (வெண்டிலேட்டரை) தனக்கு வேண்டாம், அதை சிறுவயது நோயாளி யாருக்காவது கொடுத்து அவரை காப்பாற்றுங்கள் என கூறி உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அனைத்தும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு கதிகலங்கி போய் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரியசான நிலையில் இருந்த அவருக்கு கட்டாயம் வெண்டிலேட்டர் பொறுத்தவேண்டிய சூழ்நிலை. ஆனால், பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை மனதில் கொண்ட அந்த மூதாட்டி, "நான் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்". எனக்கு இந்த வெண்டிலேட்டர் வேண்டாம், இளம் நோயாளி யாருக்காவது கொடுத்து அவர் உயிரை காப்பாற்றுங்கள் என கூறி வென்டிலேட்டரை தானம் செய்துள்ளார். மேலும், அடுத்த 2 வது நாள் அந்த மூதாட்டி உயிர் இழந்துள்ளார்.

இந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தையும் மக்களை நெகிழ்ச்சியும் அடைய செய்துள்ளது.


Advertisement