ஏக்கத்தோடு பார்த்த காதல் மனைவி..! ஆசையாக சோறு ஊட்டும் காதல் கணவன்.! கொரோனா பாதிப்பில் கண் கலங்க வைக்கும் காட்சி.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

ஏக்கத்தோடு பார்த்த காதல் மனைவி..! ஆசையாக சோறு ஊட்டும் காதல் கணவன்.! கொரோனா பாதிப்பில் கண் கலங்க வைக்கும் காட்சி.!

கோவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து உலக நாடுகளையும் அச்சுறுத்திவருகிறது. 1000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் உயிர் இழப்புகளும், வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் வயதான தம்பதி ஒருவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது மனைவி பசியால் அவதிப்படுவதை உணர்ந்த கணவன் அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியடைகிறார். இந்த காட்சியை சீனாவின் பிரபல நாளிதழ் ஓன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தள்ளாடும் வயதிலும், உடல்நிலை சரியில்லாத சமயத்திலும், தனது மனைவிக்காக கணவன் சாப்பாடு ஊட்டுவிடும் அந்த காட்சியும், மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் உருக செய்வதாக உள்ளது. மேலும், இன்று காதலர் தினம் என்பதால் இந்த video சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo