உலகம்

கொரோனா பாதிப்பால் திணறி வரும் ட்ரம்ப் அரசு.! நேற்று ஒரே நாளில் 4141 பேர் உயிரிழப்பு..!

Summary:

Now America most affected by corona

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலகம் நாடுகள் பலவற்றிலும் தனது கொடிய முகத்தை காட்டி வருகிறது. இந்நோயானது ஆண், பெண், சிறியவர், பெரியவர், இளைஞர், ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் ஆட்டி படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்நோயால் வல்லரசு நாடான அமெரிக்காவின் டிரம்ப் அரசு திணறி வருகிறது.இதுவரை அமெரிக்காவில் 6,77,570 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,479 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 4141 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. அதன்படி மொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்கா இந்நிலையால் அந்நாட்டு அரசு மிகவும் நிலைக்குலைந்து போயிருக்கிறது.


Advertisement