13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
வடகொரியா அதிபரின் கதை முடிந்ததா.? அடுத்தது யார்..? மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா.! வைரலாகும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!
வடகொரியா அதிபர் பற்றிய உறுதியான எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அந்நாட்டில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.
கடந்த சில வாரங்களாகவே பொதுவெளியில் தென்படாத வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன், இதய அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் மரணமடைந்துள்ளார் எனவும், மூளைச்சாவு அடைந்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதிபர் உயிருடன் உள்ளாரா இல்லையா என எந்த தகவல்களும் இல்லை.
இந்நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பானது மேற்கொள்ள இருப்பதாக செயற்கைகோள் புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் பெருகிவரும் நிலையியல், சாதாரணமான ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற வாய்ப்பு இல்லை எனவும், இந்த அணிவகுப்பு வடகொரிய தலை வருக்கான இறுதி சடங்கிற்கானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் மாரடைப்பால் மரண மடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.