BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அமைதிக்கான நோபல் பரிசு 2023 : சிறை கைதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.!!
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோம்மில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து மருத்துவம், இயற்பியல் வேதியல் மற்றும் இலக்கிய துறையில் நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த நர்கீஸ் மொஹமதி (Narges Mohammadi) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஒரு இளம்பெண் ஹிஜாப் ஒழுங்காக அணியாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துள்ளார். இதை அறிந்த நர்கீஸ் மொஹமதி உயிரிழந்த பெண்ணிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக ஈரான் அரசால் 13 முறை நர்கீஸ் மொஹமதி கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 31 ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்து வருகிறார். மேலும் நர்கீஸ் பெண்களின் நீதிக்காகவும், சுதந்திரத்துக்காகவும் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போராளி நர்கீஸ் மொஹமதிக்கு இப்போது அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.