BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்து 6பேர் பலி..!!
உலகளவில் நிலநடுக்கம் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேபாளநாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் ரிக்டர் 6.3 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறி அவசரகதியில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

அத்துடன் நிலநடுக்கத்தின் போது வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது டெல்லி, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டு வீடுகளில் உள்ள பொருட்கள் குலுங்கியதால், மக்களும் அச்சத்திற்குள்ளாகினர். நேபாளத்தில் மீட்பு பணிகள் துரிதமுறையில் நடந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.