இனி அவ்ளோ தான்.... ரஷ்யாவிற்கு தலையில் விழுந்த இடி.! உக்ரைனுடன் கூட்டு சேர்ந்த நேட்டோ..!

இனி அவ்ளோ தான்.... ரஷ்யாவிற்கு தலையில் விழுந்த இடி.! உக்ரைனுடன் கூட்டு சேர்ந்த நேட்டோ..!



NATO support to ukraine

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக வந்த தகவலை அடுத்து  அந்நாட்டின் மீது போர்தொடுக்கும் முடிவை ரஷ்யா எடுத்தது. உக்ரைனை நேட்டோவில் இணைய வேண்டாம் என ரஷ்யா பல முறை வலியுறுத்தியும், அதற்கு உக்ரைன் செவிசாய்க்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே, உக்ரைன் மீது ரஷ்யா தற்போது போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. இதற்க்கு உக்ரைன் படைகளும் பலத்த எதிர்ப்பு கொடுத்து வருகிறது.

ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக வரும் என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் போதிலும் நேட்டோ நாடுகள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இந்தநிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு தேவை ஆயுதங்கள்தான். நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், எப்படி போரிடுவது என்பது எங்களுக்கு தெரியும். எப்படி ஜெயிப்பது என்பதுவும் தெரியும். எங்களுக்கு எந்த அளவுக்கு ஆயுதங்கள் கூடுதலாக, விரைவாக வந்து சேருகிறபோது இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என கூறினார். இந்தநிலையில், உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதை நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேட்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் கூறுகையில், உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதியுதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.