பெற்ற தாய் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கட்டி அணைத்து உறங்கிய குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோக சம்பவம்.

பெற்ற தாய் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கட்டி அணைத்து உறங்கிய குழந்தை! நெஞ்சை உருகவைக்கும் சோக சம்பவம்.


Murder

மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் டேல்கினா(27) என்ற பெண். இவருக்கு ஈவா என்ற 1 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக டேல்கினா வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தைகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு உடலில் காயங்களுடன் டேல்கினா இறந்து கிடந்துள்ளார். ஆனால் பெற்ற தாய் இறந்தது கூட தெரியாமல் குழந்தை தாயை கட்டி அணைத்தபடி மயங்கி கிடந்துள்ளது.

Masko

இந்நிகழ்வை கண்டு அனைவரும் கண்கலங்கியுள்ளனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்கும், குழந்தையை மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். பின்னர் போலீசார் விசாரனை மேற்கொண்டதில் டேல்கினாவின் காதலன் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து போலீசார் டேல்கினாவின் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குழந்தையில் உடல் நலம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.