உலகம் லைப் ஸ்டைல்

என் அம்மாவ எங்கிட்ட குடுங்க..! ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடிய மகள்..! கண் கலங்க வைத்த சம்பவம்.!

Summary:

Mother died of corono virus daughter run behind ambulance

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.  இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்  வைரஸ் தாக்குதலால் இதுவரை 400 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்னனர்.

இந்நிலையில் சீனாவின் உஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்த பெண் ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச்சொல்லும்போது தனது அம்மாவை பார்க்கவேண்டும் என இளம் பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னல் ஓடிவந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா, அம்மா என்று அந்த இளம் பெண் கதறி அழுதுள்ளார். ஒருவேளை அந்த பெண்ணை அவரது தாயின் சடலத்தின் அருகே அனுமதித்தால் இறந்துபோன தாயிடம் இருந்து கொரோனா வைரஸ் அந்த பெண்ணுக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதால், அப்பெண் தனது தாயைப் பார்ப்பதை மருத்துவர்கள் தடுத்துவிட்டனர் என கூறியுள்ளனர்.


Advertisement