விழிபிதுங்கும் அமெரிக்கா! 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1300 பேர் பலி!

Most of the affected by corona in American country


most-of-the-affected-by-corona-in-american-country

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 311,357 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1349 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை பெரிதும் ஆட்டிப் படைக்கிறது. இந்த வைரஸால் அந்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார இழப்பும் வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் ட்ரம்பின் அரசின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

America

கொரோனாவின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டல்களிலேயே 1,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று அமெரிக்காவின் பல நிறுவனஙகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பணியினை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் அமெரிக்காவில் புதிதாக 30000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 1349 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 8500யை தாண்டியுள்ளது.