சுழற்றி சுழற்றி சுட்டித்தனம் செய்யும் குட்டி யானை... கவலை மறந்து சிரிக்க வைக்கும் வீடியோ காட்சி....



Mom and daughter Elephant viral video

உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் மற்றும் குறும்புதனத்தில் ஒரு குழந்தை போன்றே நடந்து கொள்ளும் என்றே கூறலாம். அந்தவகையில் மனிதர்களை போலவே ஆக்ரோஷம், அமைதி குணம் என மனிதர்களின் குணநலனுடன் இயற்கையாகவே ஒன்றிப்போன விலங்கு யானை. 

காட்டில் வாழும் யானை ஆக்ரோஷத்துடன் செயல்படும் என்றாலும், அது சிந்தித்து சுயமாக செயல்படும் தன்மையை கொண்டது. சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு யானை அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்மறந்து சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கு குட்டி யானை ஒன்று தன் தாயுடன் நின்று கொண்டு பெரிய யானைகளைப் போன்று தனது தும்பிக்கையை சுழற்றி சுழற்றி இரை சாப்பிடுவது போன்ற செயலை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க: கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் அமெரிக்கா மக்கள்...! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?