இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மோடி வெளியிட்ட ட்வீட்!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மோடி வெளியிட்ட ட்வீட்!


modi tweet abouot bomb blast


ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 

இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 100 க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது காட்டுமிராண்டித்தனம். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர இந்தியா, இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.