பிரபல மாடல் அழகி ரஷ்யாவுடனான போரில் மரணம்.!

பிரபல மாடல் அழகி ரஷ்யாவுடனான போரில் மரணம்.!


Model died in war

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற மாடல் அழகி தலிதா டோ வாலே ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தலிதாவைக் கண்டுபிடிக்க பதுங்கு குழிக்குச் சென்ற முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் உயிரிழந்தார்.

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தலிதா டோ வாலே உலகெங்கிலும் பல நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்றுள்ளார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்திய தலிதா டோ வாலே, கடந்த 3 வாரங்களாக ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டு வந்தார்.