தோண்ட.. தோண்ட.. கல்லறையில் தங்க குவியல்.! தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி.!

தோண்ட.. தோண்ட.. கல்லறையில் தங்க குவியல்.! தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி.!



massive-gold-treasure-found-in-panama-old-lord-tomb-by

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் பழங்கால கல்லறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உயர் பொறுப்பில் இருந்த மதகுருவின் கல்லறையாகவும் அது இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

America

பணமாவின் தலைநகரில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லறையை தோண்டிய போது குவியலாக தங்கத்தை கண்ட ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் அது எந்த மத குருவின் கல்லறை என்பது கண்டறியப்படவில்லை.

இறந்த நபர் தலைகீழாக புதைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் 32 பேர் புதைக்கப்பட்டுள்ளனர். அந்த மதகுருவை அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

America

அவருடன் புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகளை தீவிர்படுத்தி உள்ளனர். தங்க தொப்பிகள், தங்க சால்வை, தங்கத்தால் ஆன திமிங்கல பருக்கள் என்று பல்வேறு பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். உயர் பொறுப்பில் இருக்கும் மத குருக்களை அடக்கம் செய்வதற்காக இந்த முறை பண்டைய காலங்களில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.