உலகம்

காதலிக்கு பயந்து, வேண்டுமென்றே கைதாகி சிறைக்கு சென்ற இளைஞர்! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Man stole speaker and get arrested voluntary

சீனாவில் வசித்து வருபவர் இளைஞர் ஜென். இவர் பெண் ஒருவரை நீண்ட காலங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு ஜென்னை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும் அந்த பெண் கேட்கவில்லை. தொடர்ந்து அவரை வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சென், அருகில் இருந்த டான்ஸ் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து அங்கிருந்த 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ப்ளூடூத்  ஸ்பீக்கரை திருடியுள்ளார். 

அதனைத்தொடர்ந்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் , போலீஸார் ஜென்னை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு திருடினால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எனது காதலியிடமிருந்து தப்பிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement