அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கும் நபர்! டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரசிகர்கள் வலியுறுத்தல்!

அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கும் நபர்! டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரசிகர்கள் வலியுறுத்தல்!


man-look-like-pop-star-michael-jackson

மைக்கேல் ஜாக்சன். அவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கூட மைக்கேல் ஜாக்சன் என்ற பெயர் மிகவும் பிரபலம். தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் இப்படி உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர்.

பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். யாரவது சிறப்பாக நடனம் ஆடினால், பாருடா மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடுகிறான் என பட்டி தொட்டியெல்லாம் இந்த வசனத்தை கேட்கும் அளவிற்கு தனது நடனத்தால் இந்த உலகையே பேச வைத்தவர்.

இப்படி 40 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் பேரும், புகழும் பெற்றவராக வாழ்ந்து வந்த மைக்கல் ஜாக்சன் கடந்த 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்து கிடந்தார். இவரது இறப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது.

Mystery

இந்நிலையில் அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே தோற்றம், அவரைப்போன்றே நடனம், பாடல் என அனைவைரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்த செர்ஜியோ கோர்டெஸ்.

மைக்கேல் ஜாக்சன் போலவே பாப் உலகில் கலக்கிவரும் இவர் யார்? எப்படி அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே உள்ளார்? அவரைப்போன்றே எப்படி இவரால் நடனம், பாடல் என அசத்த முடிகிறது? ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இறக்கவில்லையா? இவர்தான் மைக்கேல் ஜாக்சனா என பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இதனால் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களும், செர்ஜியோ கோர்டெஸ்வின் ரசிகர்களும் நீங்கள் DNA பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தி வருகின்றனர்

Mystery