பெற்ற தாயை உயிருடன் புதைத்த மகன்..! மூன்று நாட்களுக்கு பிறகு தோண்டிய போது காத்திருந்த அதிர்ச்சி..! பத பதைக்க வைக்கும் வீடியோ..!

பெற்ற தாயை உயிருடன் புதைத்த மகன்..! மூன்று நாட்களுக்கு பிறகு தோண்டிய போது காத்திருந்த அதிர்ச்சி..! பத பதைக்க வைக்கும் வீடியோ..!


man-buried-his-mother-alive-in-china-video-goes-viral

சீனாவில் நபர் ஒருவர் தன்னை பெற்ற தாயை ஈவு இரக்கமின்றி மண்ணில் வைத்து உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
சீனாவின் Shannxi மாகாணத்தில், Zhang என்ற பெண் தனது மாமியாரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது மாமியாரை தனது கணவன்தான் சக்கர நாற்காலியில் வைத்து வெளியில் அழைத்துச் சென்றதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவன் வெளியே அழைத்துச்சென்ற பிறகு எனது மாமியார் வீட்டிற்கு திரும்பவில்லை என அவர் கூறியதை அடுத்து போலீசார் அவரது கணவனை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், தனது தாயை ஒரு இடத்தில் உயிருடன் புதைத்துவிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் கூறிய இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்று பார்த்தபோது ஒரு பெண் முனகும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக போலீசார் அந்த இடத்தைத் தோண்ட, அங்கு அந்த நபரின் தாயார் Wang (79) உயிருடன் இருந்திருக்கிறார். மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையிலும், உணவோ தண்ணீரோ இல்லாத நிலையிலும், Wang உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து வாங்கின் மகனை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.