கொரோனவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா நீங்கள்?.. உங்களுக்கு இந்த அறிகுறி இருக்குதா?.. கவனமாக இருங்கள்; உச்சகட்ட எச்சரிக்கை.!Long term Corona effect Leg Pain Symptoms 

 

உலகளவில் கடந்த 2019ம் ஆண்டில் பரவத்தொடங்கி, 2021ல் வெளியுலகம் அதன் வீரியத்தை அறிந்துகொண்டது. சீனாவில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ், உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. 

இன்றளவில் கொரோனா வைரசுக்கு பெரும்பாலானோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை போல வலம்வந்தாலும், கொரோனா பரவிய காலத்தில் அதனால் பாதிக்கப்பட்டு, அதன் பிடியில் இருந்து பலரும் மீண்டனர். 

கொரோனா வைரஸின் போதே உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நோய்களை எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும் என எச்சரித்து இருந்தனர். சிலர் அதனை உறுதியும் செய்தனர். இந்நிலையில், கொரோனாவின் நீண்டகால நோய் பாதிப்பை சந்திப்போருக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டுவது உறுதியாகியுள்ளது. 

corona

இவ்வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்கள் 10 நிமிடம் நின்றுகொண்டு இருந்தால், அவர்களின் மூட்டுப்பகுதியில் நீல நிறமாக மாறுகிறது என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. உலகளவில் இந்த பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 33 வயது நபர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கிறார். இவருக்கு தற்போது 10 நிமிடம் நின்றாலே மூட்டு பகுதியில் கடுமையான வலி, மூட்டின் நிறம் மாறுதல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதற்கு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு நீண்டகால கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.