சிங்கப்பூரில் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதம் ஊரடங்கு! பிரதமர் அதிரடி அறிவிப்பு!

சிங்கப்பூரில் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதம் ஊரடங்கு! பிரதமர் அதிரடி அறிவிப்பு!


Lockdown announced by singapore prime minister

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உலகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகில் பல நாடுகளில் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் வெளியிட்டுள்ளார்.

Coronovirus

மேலும் சிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கில் அத்தியாவசிய தேவை மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.