சிங்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தை!. திடீரென குழந்தை மீது சிங்கம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ!

சிங்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தை!. திடீரென குழந்தை மீது சிங்கம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ!


lion catch the child

ரஷ்யாவில் தம்பதியினர் தங்களுடைய நான்கு வயது குழந்தையுடன் சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். சர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றினை வைத்து பயிற்சியாளர் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார்.

அந்த சர்க்கஸ் ஒரு இரும்பு கம்பி வலையிலான கூடாரத்திற்குள் நடைபெற்றது அப்போது அங்கு நான்கு வயது குழந்தை கூண்டிற்கு அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி குழந்தை மீது பாய்ந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் ஒரு வழியாக பயிற்சியாளர் சிங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து தற்போது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.