உலகம்

வீடியோ: இந்தோனேஷியா விமான பயணிகளின் கடைசி நிமிடங்கள்!

Summary:

Last minute of indonesia flight passangers

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம், 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தை தேடும் பணியில்  இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதனால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் விமானம் நொருங்கி விழுவதற்கு முன்பு பயனிகள் அல்லாவின் பெயரை சொல்லி வேண்டிக்கொள்ளும் உருக்கமான வீடியோ காட்சி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. 


Advertisement