இது தேவையா? கிங் கோப்ரா பாம்புடன் விளையாடிய நபர்! வெறித்தனமாக சுருண்டு சுருண்டு சீறிப்பாய்ந்து..... திக் திக் காணொளி!



king-cobra-attack-viral-video

இணைய உலகில் தினமும் புதிய வீடியோக்கள் வைரலாகும் நிலையில், தற்போது கிங் கோப்ரா தாக்குதல் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் ஆபத்துக்களை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் மாறியுள்ளது.

கிங் கோப்ராவுடன் ஆபத்தான விளையாட்டு

சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில், மலைப்பகுதியில் ஒருவர் கைத்தடியை பயன்படுத்தி கிங் கோப்ராவை தட்டிக் விலக்கி விட்டு அதனுடன் விளையாட முயற்சிக்கிறார். ஆரம்பத்தில் பாம்பு பின்வாங்கும் போல் தோன்றினாலும், சில நொடிகளில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதிர்ச்சியூட்டிய தாக்குதல்

அந்த இளைஞர் பாம்பை கையில் பிடிக்க முயன்ற தருணத்தில், கிங் கோப்ரா திடீரென திரும்பி வந்து அவனது காலில் பலமுறை கடிக்கிறது. வீடியோ இங்கே திடீரென நிற்க, அதற்குப் பிறகு அவரது நிலைமை குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தூங்கும் சிங்கத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என சொன்னது உண்மைதான்! சிங்கத்தின் பிடியில் சிக்கி வலியால் துடித்த வாலிபர்! திகில் வீடியோ..

பார்வையாளர்களின் எதிர்வினை

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் அந்த இளைஞரின் அறியாமை மற்றும் அவசரத்தை கடுமையாக விமர்சித்து, இப்படியான ஆபத்தான செயல்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

இயற்கையின் உயிரினங்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்வதே மனிதனின் பொறுப்பு. ஒரு நொடிக் கவனக்குறைவும் வாழ்க்கையை ஆபத்துக்கு உட்படுத்தும் என்பதனை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

 

இதையும் படிங்க: அய்யோ.. தண்ணீரில் மூழ்கிய பெண்! காலில் துணியை கட்டி தலைகீழாக தொங்கி காப்பாற்றும் வாலிபர்! இறுதியில் நடந்த ட்விஸ்டை பாருங்க! வைரல் வீடியோ...