உலகம் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி! ஆண்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்! விலை என்ன தெரியுமா?

Summary:

Kenya girls sold to marriage for 20 goats and 10 cows

குழந்தை திருமணம், பெண்களை அடிமைகளாக நடத்துவது போன்ற செயல்கள் பண்டையகாலத்தில் வழக்கமான ஓன்று. நாகரிகம் வளர வளர பெண்களும் சம உரிமை வழங்கப்பட்டது. கருத்து சுதந்திரம், பெண்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை ஆண்களுக்கு நிகராக வழங்கப்படுகிறது. ஒருபக்கம் இப்படி இருக்க இன்னும் ஒருசில இடங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்தவகையில் கென்­யா­வி­லுள்ள பின்தங்­கிய சமூ­கங்­களில் பெண்களை ஆண்களுக்கு விற்கும் கொடுமையான நடைமுறைகள் இன்னும் பின்பற்றப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த இளம் பெண்களை 20 ஆடுகள் மற்றும் 10 மாடுகளை பெற்று கொண்டு ஆண்களுக்கு திரு­ம­ணத்­துக்­காக விற்கப்படுகின்றன்னர்.

இவ்வாறு விர்க்கப்படும் பெண்கள் ஒருசில நேரங்களில் தன்னை வாங்கும் மணமகனை வேண்டாம் என்று சொல்வதும் வழக்கம். அவ்வாறு கூறும் பெண்களை வலுக்கட்டாயமாக ஆண்களுக்கு விற்கும் கொடூர நிகழ்வுகள் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.


Advertisement