மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
ஒருவரின் வீரமே முதலையை வேட்டையாடுவது தானாம்....சிங்கம் புலி எல்லாம் இவர்களுக்கு அசால்ட்டு! கூர்மையான கல்லு தான் இந்த அபூர்வ பழங்குடியினரின் ஆயுதம்!!!
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வாழும் ‘எல் மோலோ’ பழங்குடியினர் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளனர். முதலை மற்றும் நீர்யானைகளை வேட்டையாடும் திறனுக்காக அறியப்படும் இந்த சமூக மக்கள், தற்போது அழிந்து வரும் பழங்குடியினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வேட்டை மரபுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
கென்யாவின் ஏரிகள் மற்றும் நதிக்கரைகள் அருகே சிறிய குடிசைகளில் வாழ்ந்து வரும் எல் மோலோ மக்கள், பல நூற்றாண்டுகளாக இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களது சமூகத்தில் ஒருவரின் வீரத்தை, அவர் வேட்டையாடும் முதலை அல்லது நீர்யானையின் அளவைக் கொண்டு மதிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் இறந்து போன பிச்சை எடுத்த முதியவர்! அவரது பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சி சம்பவம்!!!
ஈட்டி மட்டுமே ஆயுதம்
தகவலின்படி, நவீன ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமல் ‘ஹார்பூன்’ எனப்படும் கூர்மையான கல் ஈட்டிகளால் மட்டுமே இவர்கள் வேட்டையாடுகின்றனர். இலக்கு அருகே வரும் வரை அமைதியாகக் காத்திருந்து, சரியான நேரத்தில் ஈட்டியை வீசி தாக்குகின்றனர்.
இரண்டு அல்லது மூன்று ஈட்டி தாக்குதல்களிலேயே பெரிய முதலைகளையும் வீழ்த்தும் திறன் இவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. வேட்டைக்குப் பிறகு அந்த விலங்கை கிராமத்துக்குக் கொண்டு வந்து, அனைவரும் சேர்ந்து உண்பது இவர்களது பழமையான மரபாக இருந்து வருகிறது.
குறைந்து வரும் மக்கள் தொகை
ஒருகாலத்தில் முதலை, நீர்யானை மற்றும் மீன்களை உணவாகக் கொண்டு வாழ்ந்த இந்த சமூகத்தின் மக்கள் தொகை தற்போது 300 முதல் 400 வரை மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. சராசரி ஆயுட்காலமும் 30 முதல் 45 ஆண்டுகளுக்குள் மட்டுமே இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு வறுமை, மருத்துவ வசதி இல்லாமை மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
வேட்டைத் தடை மாற்றிய வாழ்க்கை
கென்ய அரசு முதலை வேட்டை மற்றும் நீர்யானை வேட்டைக்கு தடை விதித்த பிறகு, எல் மோலோ மக்களின் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீன்களை மட்டுமே பிரதான உணவாகக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், பலர் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
உலகின் மிகவும் அபூர்வமான மற்றும் அழியும் நிலையில் உள்ள பழங்குடியினங்களில் ஒன்றாக எல் மோலோ மக்கள் தற்போது ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.