BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுகிரிஹெல்லி எனும் கிராமத்தில் 32 வயதான ரமேஷ் என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக அஸ்வினி (27 வயது) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நடத்தையில் சந்தேகம்
ரமேஷுக்கு தனது மனைவி அஸ்வினி மீது தீராத சந்தேகம் இருந்துள்ளது. எனவே, அன்றாடம் அவர் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இவரது தொல்லை அதிகரித்த காரணத்தால், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ளமுடியாமல் தனது சொந்த ஊருக்கு அஸ்வினி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.!
இதனை தொடர்ந்து கடந்த மே 18ஆம் தேதி அங்கு சென்ற ரமேஷ் மீண்டும் அவரை இனி சண்டை போட மாட்டேன் என்று கூறி அழைத்து வந்துள்ளார். பின் கணவர் வீட்டிற்கு அஸ்வினி வந்த நிலையில், அவரது பெற்றோர் அஸ்வினிக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருந்தனர். ஆனால் அஸ்வினி செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.
பிணமான அஸ்வினி
இதனால் பதறிப்போன பெற்றோர் நேரடியாக வீட்டிற்கு வந்தனர். அப்போது அந்த வீட்டில் யாருமே இல்லை. இதனை தொடர்ந்து மகளை காணவில்லை என்று அங்குமிடம் தேடிய நிலையில் வீட்டிற்கு பின்புறமாக ஒரு குழி மூடப்பட்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அவர்கள் அதைத் தோண்டி பார்த்தபோது உள்ளே பிணமாக அஸ்வினி இருந்துள்ளார்.
வீடியோ காலால் விபரீதம்
இதனைத் தொடர்ந்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் தனது மனைவி மீது சந்தேகத்தில் இருந்த ரமேஷ் அவர் வீடியோ காலில் பேசுவதை பார்த்து யாரிடம் பேசுகிறாய் என்று சண்டை போட்டு வந்துள்ளார்.
எனவே, அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் ரமேஷை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!