திடீர் தாக்குதல்! நீங்கள்தானே அனுமதி கொடுத்தீர்கள்... இப்போ ஏன் தாக்குகிறீர்கள்? இந்திய கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல்! நடுக்கடலில் நடந்தது என்ன? அதிர வைக்கும் 30 வினாடி ஆடியோ!!!



iran-navy-attack-indian-ships-strait-of-hormuz

 

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் நடுவில், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு இந்திய வணிகக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் சர்வதேச கடல் போக்குவரத்திலும் கவலை ஏற்படுத்தியுள்ளது. கப்பல்களில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் தாக்குதல்... முன் அறிவிப்புக்கு முரண்பாடு

லெபனான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் முன்பே அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்ததால், அந்த முடிவு மாற்றப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியை மீண்டும் மூடுவதாக அறிவித்த ஈரான், அங்கு செல்ல முயன்ற கப்பல்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. தகவலின்படி, சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கி சூடு மூலம் தாக்குதல் நடந்துள்ளது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்! சீனாவின் முதுகில் குத்திய ஈரான்.. மோதிக்கொள்ளும் உலக நாடுகள்! உலக வர்த்தகத்தில் மீண்டும் அதிர்ச்சி அலைகள்!!!

30 வினாடி ஆடியோ வெளியீடு பரபரப்பு

தாக்குதலின் போது ‘Sunmar Herald’ கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் ஈரான் கடற்படையிடம் உருக்கமாக பேசிய 30 வினாடி ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், “நீங்கள்தான் அனுமதி கொடுத்தீர்கள்... இப்போது ஏன் தாக்குகிறீர்கள்? திரும்பிச் செல்ல விடுங்கள்” என்ற கோரிக்கை கேட்கிறது. மேலும் ‘Jag Arnav’ என்ற மற்றொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. கப்பல்களில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், யாருக்கும் காயம் இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது.

இந்தியாவின் கடும் கண்டனம்

இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வணிகக் கப்பல்களின் சுதந்திரப் பயணமும், மாலுமிகளின் பாதுகாப்பும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரான் தூதரிடம் இந்தியா தனது அதிருப்தியை நேரடியாக தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பாதுகாப்பாக வழிசெய்த ஈரானின் நடவடிக்கைகளை நினைவுபடுத்திய இந்தியா, தற்போதைய சூழல் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் வர்த்தகத்துக்கு பாதிப்பு அச்சம்

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களால் 13-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் Strait of Hormuz பகுதியை கடக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாக நடைபெறுவதால், இங்கு நிலவும் பதற்றம் சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அடுத்த கட்ட முயற்சிகள் குறித்து கவனம் திரும்பியுள்ளது.

 

இதையும் படிங்க: டிரம்ப்புக்கு சவூதி கொடுத்த பகீர் எச்சரிக்கை! அதை முற்றுகையிட்டு இந்த வழியையை கையில் எடுங்க..! மத்திய கிழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் திருப்பங்கள்..!!