அதிரடி., சரவெடி.. சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்த இந்தியா.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

அதிரடி., சரவெடி.. சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்த இந்தியா.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!



International Civil Aviation Top Airport List

 

உலகளவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை தொடர்பான பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, இந்தியா விமான பாதுகாப்பு தரவரிசை பட்டியலில் 48ம் இடத்தில் இருக்கிறது.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டில் இந்தியா 102ம் இடத்தில் இருந்தது. சர்வதேச விமான போக்குவரத்துகளை பொறுத்தமட்டில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 2ம் இடத்தில் இருக்கிறது. தென்கொரியா 3ம் இடத்தில் உள்ளது. 

International Civil Aviation

இந்தாண்டில் 48ம் இடத்தில் இந்தியாவும், அதற்கடுத்தபடியாக 49ம் இடத்தில் சீனாவும் உள்ளது. இந்த விஷயம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா சிறப்பாக விமான பாதுகாப்பு விஷயத்தில் செயல்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். விமான போக்குவரத்து இயக்குனரகம் திறமையான அதிகாரிகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தரவரிசை பட்டியலில் 102ம் இடத்தில் இருந்து 48ம் இடத்திற்கு வந்துள்ளது சாதனை" என்று தெரிவித்தார்.