15 வருடமாக முகத்திற்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் பெண்! கவலையில் குடும்பத்தினர்!

15 வருடமாக முகத்திற்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் பெண்! கவலையில் குடும்பத்தினர்!


Inland powder

இங்கிலாந்து நாட்டில் ஐந்து குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்திற்கும் பூசும் பவுடரை உண்ணும் வரும் சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தில் கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிசா என்ற பெண் முகத்திற்கு பூசும் பவுடரை விரும்பி டப்பா டப்பாவாக தின்று வருகிறார். முதலில் இவர் வீட்டுக்கு தெரியாமல் பவுடரை தின்று வந்துள்ளார்.

Inlanf

பின்னர் குடும்பத்தினருக்கு தெரியவரவே தற்போது அவர்கள் முன்னிலையிலும் தின்று வருகிறார். இவர் குறிப்பாக குழந்தைகள் பவுடரை அதிகம் தின்று வருகிறார். இவரின் இந்த வினோத பழக்கத்தால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.

மேலும் இவர் இதுவரை இந்திய மதிப்பில் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பவுடரை தின்றுள்ளார். இவர் போதைக்கு அடிமையாவது போல் பவுடர் தின்னும் பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தினர் இதனை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.